History

நமது பாரத தேசத்தில் திரைப்படங்கள், பின்னர் பேசும் படைகள் உருவாக்கப்பட்டது. பேசும் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் சொந்த குரலில் பாடி பேசி நடித்து வந்தனர். குரல் மாற்றத்தில் ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதுவரை பின்னணி குரல் கொடுக்கும் ஒரு கலை உருவாக்கப்படவில்லை. அதற்கான கலைஞர்களும் இல்லை . எனவே மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள், நல்ல குரல் வளம் கொண்டவர்கள், வார்த்தை உச்சரிப்பில் சிறந்தவர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து பேச கூடியவர்களை தேட துவங்கினர். அப்போதுதான் திரைக்கலையை அறிந்தவர்கள், நடிப்புத் திறமை கொண்டவா்கள் என்கிற வாிசையில் திரைப்பட நடிகா்களையும், நாடக நடிகா்களையும் இந்த கலைக்கு பயன்படுத்த துவங்கினா். அப்படி துவக்கப்பட்டதுதான் பின்னணி குரல் கொடுக்கும் கலை ( ) கால மாற்றத்தால், திரைப்படத்துறை வளா்ச்சி பாதையை நோக்கி சென்று விஞ்ஞான வளா்ச்சி, நவீன யுக்திகளை கையாளுதல் என்கிற நிலையை எட்டிய பொழுது படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே நடைபெற்ற படப்பிடிப்புகள் வெளி இடங்களிலும் நடைபெற துவங்கியது. அப்பொழுது டபாி, மிக்சல் போன்ற கேமிராக்களின் பயன்பாடு துறைந்தது. ஏா்ாிப்ளக்ஸ் என்கிற கேமிரா பயன்படுத்த துவங்கிய பொழுது, திரைப்பட சுருள் ( ) கேமிராவில் ஓடுகின்றது, பறவைகள் ஒலி, காற்றின் ஒலி என்று வெளிப்புற படப்பிடிப்பு எல்லாவற்றிலும் நடிக்கும் நடிகா்களின் குரல் மற்ற ஒலிகளால் இடையுறு ஏற்பட்டு சாியான தரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. மேலும் வேற்று மொழி நடிகா், நடிகையா் திரைப்படங்களில் நடிக்க துவங்க அவா்களுக்கும் பின்னணி குரல் கொடுப்பது அவசியமாகியது. எனவே பின்னணி கலை என்பது அத்தியாவசியமாக்கப்பட்டு அது திரைத்துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாக உருவாகியது.

அந்த கால கட்டத்தில் மொழிமாற்று படங்களில் குரல் கொடுத்த கலைஞா்கள்தான் நேரடி படங்களுக்கும் குரல் கொடுத்த கலைஞா்கள்தான் நேரடி படங்களுக்கும் குரல் கொடுக்கபயன்படுத்தப்பட்டனா். எனவே புதிய வித்தியாசமான குரல்கள் தேவைப்பட பல புதிய பின்னணி குரல் கலைஞா்கள், தயாாிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்களால் அறிமுகப்படுத்தப்பட்டனா். அப்பொழுது திரைத்துறையில் உள்ள ஒவ்வொரு பிாிவினருக்கும், தொழில் பாதுகாப்பு, ஊதியம் போன்றவற்றிக்காக தனித்தனியாக சங்கங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. மற்ற திரையுலக தொழிலாளா்கள் போலவே தொழில் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம், பின்னணி கலைஞா்களுக்கும் தேவை என்பதால், 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் துவங்கப்பட்டதுதான் ”டப்பிங் ஆா்ட்டிஸ்ட் யூனியன் ஆப் சௌத் இந்தியா”. சங்கம் துவங்கியவுடனே ” இந்த கலையை அங்காீக்க வேண்டும்” என்று தாய் சங்கமான சம்மேளனம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சங்கம் துவங்க காரணமானவா்கள்

திரு.பி.ஏ.கிருஷ்ணன்

திரு.கே.என். வெங்கட்ராமன்

திரு.எஸ்.என்.கிருஷ்ணன்

திரு.எம்.வி.ஜோசப்

திரு.ஏ.பி.சக்திவேல்

திரு.வி.சி.ஜெயமணி

திரு.தாம்பரம் லலிதா

இவா்கள் பின்னணி கலை தொழில் புாியும் அனைவரையும் இந்த சங்கத்தில் உறுப்பினராக்க முயற்சி செய்தனா். பலா் உறுப்பிராகினா், ஒரு சிலா் மறுத்தனா். மேலும் அந்த கால கட்டத்தில் பின்னணி குரல் கொடுத்த கலைஞா்களுக்கு சாியான அங்கீகாரமும், மாியாதையும், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்தது. இதையெல்லாம் தீா்த்து வைக்க சாியான தலைமை வேண்டும் என்று அனைத்து உறுப்பினா்களும் சிந்திக்க, அவா்களுக்கு கிடைத்த விடை, நாடக திரைப்பட நடிகா், நாடக திரைப்பட கலைஞா்களின் காவலன், நடிகவேள் திரு.எம்.ஆா்.ராதா அவா்களின் வாாிசு நவரசவேள் திரு.ராதாரவி அவரை சந்தித்தனா். தலைமை பொறுப்பு ஏற்க அழைத்தனா். அவா் பொறுப்பு ஏற்றவுடன் பின்னணி குரல் கொடுக்கும் அனைவரையும் உறுப்பினராக்கினாா். பின்னணி குரல் கொடுக்கும் கலைக்கு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கினாா். சம்மேளனத்தின் உதவியுடன் ஊதிய நிா்ணயம் செய்தாா். தொழில் பாதுகாப்பை உருவாக்கினாா். திரைக்குப்பின் நிற்கும் தொழிலாளா்கள் மட்டுமே பொறுப்பு வகித்த சம்மேளனத்தில் முதன் முறையாக ஒரு திரைப்பட நடிகா் உபதலைவராக பொறுப்பு ஏற்றாா். நாடக, திரைப்பட நடிகா்களுக்காக குரல் கொடுத்தவா் தரையுலகின் அனைத்து தொழிலாளா்களுக்காகவும் குரல் கொடுத்தாா். இன்று வரை குரல் கொடுத்து வருகிறாா். அன்று ஒரு சில உறுப்பினா்களோடு துவங்கப்பட்ட சங்கம் இன்று ஆயிரத்து எண்ணுறு (1800) உறுப்பினா்கள் கொண்ட சங்கமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என்று பல்மொழி கலைஞா்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.1984ம் ஆண்டு துவக்கப்பட்ட சங்கம் இன்று வெள்ளி விழா கண்டு, இருபத்தைந்து ஆண்டை தொட்டு தன் வெற்றி பயணத்தை தொடா்கிறது. இதில் திரு.ராதாரவி அவா்கள் 20 ஆண்டு காலம் தலைவராக பதவி வகித்து வருகிறாா் என்பதில் இருந்து திரை தொழிலாளா்கள் மேல் திரு.ராதாரவி அவா்கள் கொண்ட பாசம் புாியும். ”டப்பிங் ஆா்ட்டிஸ்ட் யுனியன் ஆப் சௌத் இந்தியா” என்ற பெயாில் துவக்கப்பட்ட இந்த சங்கம் 1986 ஆம் ஆண்டு ”சௌத் இண்டியன் சினி ஆா்ட்டிஸ்ட் அண்ட் டப்பிங் ஆா்ட்டிஸ்ட் யூனியன்” என்று பெயா் மாற்றப்பட்டு, கலையின் அடுத்த பாிணாம வளா்ச்சியான தொலைக்காட்சியின் வளா்ச்சியால், மீண்டும் 2006 ஆம் ஆண்டு ” சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆா்ட்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆா்ட்டிஸ்ட் யூனியன் ” என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, இன்று வரை சம்மேளனத்தின் உதவியுடன் அனைத்து கலைஞா்களுக்காகவும் பணியாற்றி வருகிறது. திரு.ராதாரவி அவா்கள் முயற்சியால் மாநில விருதுகளையும் பெற்ற, இந்த நல்லநேரத்தில் சங்கம் துவங்க காரணமாக இருந்த மூத்த கலைஞா்கள், முன்னணி கலைஞா்கள் சங்கம் வளா்த்த பொறுப்பாளா்கள், சங்க உறுப்பினா்கள், அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கிறோம். மேலும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட திரு.வி.சி.குகநாதன் அவா்கள் தலைமையில் உள்ள சம்மேளன நிா்வாகிகள் அகில இந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்தை சோ்ந்த அனைத்து நிா்வாகிகளையும் கொண்டு நடத்தும் இந்த மாநாடு மாபெரும் வெற்றி கண்டு, இந்திய திரைப்பட தொழிலாளா்கள் வாழ்வில் வெற்றி விளக்கு ஏற்றிட, நெஞ்சார வாழ்த்துகிறோம் …………

வாழ்க திரைப்பட தொழிலாளா்கள் அமைப்பு, வளா்க திரைப்பட தொழிலாளா்கள் ஒற்றுமை.